புதன், 2 செப்டம்பர், 2009

பூலோக சொர்க்கம் பாதாள் புவனேஷவர்


பயண குறிப்புகள் 



உத்தர்கண்ட் மானிலத்தில் அமைந்துள்ள இந்த பாதாள புவனேசுவரம் மிகவும் ரம்மியமானது. செல்லும் வழியில் பல இடஙகளில் பனி படர்ந்த இமயத்தின் சிகரங்களை காணலாம். இந்த இடம் கடல் மட்டதிலுருந்து 1350 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  தரை மட்டத்திலுருந்து கீழே சுமார் 30 அடி ஆழத்தில் இந்த இயற்கை குகைக்கோவில் அமைந்துள்ளது.

உள்ளே செல்லும் பாதை மிகவும் குறுகியதும் , செங்குத்தானதுமாகும்.   தவழ்ந்து தான் செல்ல வேண்டும். பிடித்து செல்ல சங்கிலி உண்டு. செல்லும் பாதை மின் விளக்கு மூலம் ஒளியேற்றம் பெற்று இருக்கிறது. ஒரு சிறுவன் கூட இதில் நேரடியாக செல்ல இயலாது. ஒருவர் செல்லும் போது ம்ற்றவர் குறிக்கிடாமல் இருக்க மணியடித்து அறிவிக்கிறார்கள்.

இந்த குகையின் மறுபக்கம் மிகப்பெரும் பள்ளத்தாக்கு இருக்கிறது. பள்ளத்தாக்கின் பக்கம் ஒரு வாசல் இருப்பதாக கூறுகிறார்கள்.

குகைக்குள் செல்ல செல்ல சிறிது மூச்சு திணறல் ஏற்பட்ட்து. முதலின் தவழ்ந்த்து வந்ததால் உண்டான களைப்பு என்றே எண்ணினோம். ஒரு நிமிடம் மேலேயும் செல்ல முடியாது கீழேயும் செல்ல முடியாது என்ற பயம் ஏற்ப்பட்டது. ஒரு வழியாக சிரமப்பட்டு குகைக்குள் சென்றடைந்தோம். குகை நன்றாய் பரந்து விரிந்து தன்னுள்ளே பல குகைகளையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது.

அங்கே ஆண்டின் சில மாதங்கள் பிராண வாயு குறைந்து காணப்படுமாம்.  நாங்கள் சென்ற செப்டம்பர் மாதம் பிராண வாயு குறைந்துள்ள மாதம் போலும் .பனிக்குளிர் காலங்களில் இந்த குகை மிகவும் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

ஆதி சங்கரர் இமய மலைக்கு தவம் இருக்க சென்றபோது இக்குகைகோவிலை கண்டதாகவும் அங்கே சிவனை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். அது முதல் வழிபாடு தொடர்ந்து நடப்பதாகவும் ஒரு குறிப்பிட்ட வழியினரே வழிபாடு நடத்துவதாகவும் கூறினார்கள். அவர்களே இங்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். 

பாண்டவர் வன வாசத்தின் போது இங்கே சிவனை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். 
இந்த குகையானது முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிக்கும் தலமாக கருதப்படுகிறது.

இந்த குகையானது நமது பால்வழித்திரள், பேரண்டம், இன்று நாம் அறிந்துள்ள வான்வெளி அறிவியல் என அனைத்தையும் கொண்ட ஒரு மாதிரியாக கருதப்படுகிறது. இக்குகை சுவற்றில் உள்ள ஒவ்வொரு உருவத்திற்கும் புராணத்திலுருந்து தொடர்பு இருப்பதாக அந்த வழிகாட்டி கூறினார்.

முக்தி அடையும் வழி . ஒரு வினோதமான விலங்கு போன்ற உருவத்தின் வாய் வழியாக சென்று வால் வழியாக சென்றால் அவர் முக்தி அடையலாம் என்று நம்புகிறார்கள். 
இந்த உருவம் வாய் சிறுத்து , வயிறு பெறுத்து, மீண்டும் வால் சிறுத்து காணப்படுகிறது. ஒரு சிறு குழந்தையின் அளவில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகுமாம். மெலிந்த உடலும் யோகா சிறப்பு பயிற்சி செய்பவராலும் இது முடியுமா என்பது ஐயமே.

சொர்க்க வழி உள்ளே ஒரு நான்கு முனை பிரிவு ஒன்று கண்டோம். இரு வழிகள் அடைக்கப்ப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு வழி ராமேசுவரம் செல்லும் பாதை என்றும் , மற்றொன்று காசி செல்லும் வழியென்றும் கூறினார்கள். (சுமார் 50 கி.மீ தொலைவில் ராமேச்வர் என்றொரு நகர் இருப்பதாக பின்னர் அறிந்தேன்) .  மற்றொரு பாதை சொர்கம் செல்லும் வழி. 

குகையினுள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது.பாதுகாவலர்கள் புகைபடககருவிகளை வாங்கி வைத்துவிடுகிறார்கள். அதையும் மீறி சிலர் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அந்த வலைத்தளங்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

இந்த அறிவியல் உலகில் புராணக்கதைகளை நம்பாதவர்களுக்கு ஒரு அற்புதமான இயற்கை குகை. பக்திமான்களுக்கோ முப்பத்து முக்கோடி தேவர்களின் இருப்பிடம். பூலோக சொர்க்கம்.
சுற்றுலா குறிப்புகள்

அருகிலுள்ள இரயில் நிலையம் : கத்தகோடம் (210 கி.மீ), தானக்புர்(184 கி.மீ)
( டெல்லியிலுருந்து கத்தகொடம் வ்ரை ராணிகேத் விரைவு இரயில் தினசரி இருக்கிறது )

அருகிலுள்ள சிறு நகரங்கள் : கங்லிகோட் (14 கி.மீ), சக்கோரி (38 கி.மீ), அல்மோரா (120 கி.மீ), பித்தோரகர் (90 கி.மீ), ராமேச்வர் (50 கி.மீ)
சுற்றுலா தலங்கள் : நைனிடால் (173 கி.மீ), பின்சார்/பின்சார் பறவைகள் சரணாலயம் ( 120 கி.மீ)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் புத்தக சந்தை » வாங்க

தமிழ் புத்தக சந்தை » விற்க