திங்கள், 5 அக்டோபர், 2009

ஏலகிரி

ஏலகிரி சென்னையிலிருந்து மற்றும் பெங்களூருவிலிருந்து வார விடுமுறை நாட்களில் செல்லத்தக்க இதமான இடம்.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 46  ல் வாணியம்பாடிக்கு முன்பாக பிரிந்து திருப்பத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 18 ல் பயணித்து பொன்னேரி கூட்டு ரோடு வரை செல்லும் போது ஏலகிரி செல்லும் பாதை தென்படுகிறது.

மகிழுந்தில் ஏலகிரிக்கு சென்னையிலுருந்து ஏறத்தாழ மூன்றறை மணித்துளியில் செல்ல முடியும் (சென்னை நகர நெரிசலுக்கு அப்பால்).  பெங்களூருக்கும் அதிக தூரமில்லை.

அடிவாரத்திலுருந்து பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும்.
ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் கடையெழு வள்ளல்கள் நினைவிற்கு வருகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு வளைவிற்கும் ஒரு வள்ளலின் பெயர் வைத்திருக்கிறார்கள்

வனத்துறையினர் தொலை நோக்கி ஒன்றை வழியில் அமைத்திருக்கிறார்கள். அடிவாரத்திலுள்ள கல்லூரியும், வாணியம்பாடி நகரும் காணலாம்.

மலை உச்சியில் சிறிய ஊர் ஏலகிரி. இன்று பல ஓய்வு விடுதிகள் வளர்ந்து மக்கள் வாழ்க்கைத்தரம் மாறியிருக்கிறது.
புத்தகங்களில் மட்டுமே பார்த்த பழங்குடியினரின் குடில்கள் சில பழமை மாறாமல் இன்னும் இருக்கிறது.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி , செயற்கையாக உருவாக்கப்பட்ட புங்கனூர் ஏரி, வேலவன் ஆலயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

கோடை காலத்தில் நீர்வீழ்ச்சியில் அதிக நீர் இருக்காது என்பதும் , சில கிலோமீட்டர் மலையேற்றம் தவிர்க்கமுடியாது என்பதாலும் ஜலகம்பாறை செல்லவில்லை.
அடிவாரத்திலுருந்து வேறு வழியாக அருவிக்கு செல்லாம் என்பது பின்னர் தான் தெரிந்தது.

பார்ப்பதற்கான இடங்கள் அதிகமில்லை என்ற போதும் கோடையில் இதன் இதமான தட்பவெப்பநிலை மக்களை கவர்ந்த்திழுக்கிறது.
கோடை பகலில் வெய்யிலின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. ஆயினும் இரவு இதமானதாயிருக்கிறது.

அரசு சுற்றுலா வளர்ச்சிக்காக் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கோடையில் நடைபெறும் கோடைவிழா குறிப்பிடத்தக்க ஒன்று.

ஏலகிரி வன் விளையாட்டு கழகம் இங்கு பாரா கிளைடிங் , மலையேற்றம் என பல வன் விளையாட்டுகள் அரசுடன் இணைந்து நடத்தி வருகிறார்கள்.

சுற்றுலா குறிப்புகள்
அருகிலுள்ள புகைவண்டி நிலையங்கள்
ஜோலார்பேட்டை 19 கி.மீ
திருப்பத்தூர் 30 கி.மீ
வாணியம்பாடி 22 கி.மீ

பெருநகரஙகளிலிருந்து தொலைவு
சென்னை - 230 கி.மீ
பெங்களூரு 165 கி.மீ
தேசிய நெடுஞ்சாலை எண் 46 -  22 கி.மீ

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்
ஜவ்வாது மலை 50 கி.மீ
அமிருதி காடுகள் 24 கி.மீ
திருவல்லம் 22 கி.மீ
காவலூர் வானாராய்ச்சி மையம் 25 கி.மீ (குறிப்பு. பொதுமக்களுக்கு சனிக்கிழமை 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ் புத்தக சந்தை » வாங்க

தமிழ் புத்தக சந்தை » விற்க